கலாட்டா

கலாட்டா

Tuesday, May 18, 2010

விவேகானந்தரின் விவேக மொழிகள்


  • மிருகபலத்தால் ஒரு போதும் உயர்வு பெறமுடியாது.ஆன்மிக பலத்தால் மட்டுமே நாம் எமுச்சி பெற முடியும். நாம் அனைவரும் மகத்தான பணிகளைச் செய்யவே பிறந்திருக்கிறோம்.

  •  மேலைநாட்டு விஞ்ஞானத்தையும் நம் நாட்டு வேதாந்தத்தையும் இணையுங்கள். இவை இரண்டுமே வாழ்வின் அடிப்படை லட்சியங்களாகும்.

  • யார் ஒருவர் எதைப்பெறுவதற்குத் தகுதி உடையவராக இருக்கிறாரோ அதை அவர் பெறவிடாமல் தடுத்து நிறுத்துவதற்கு இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள எந்த சக்தியாலும் முடியாது.

  • துன்பம் விளைவதற்கு அறியாமையைத் தவிர வேறு எதுவுமே காரணமில்லை. இந்த உண்மையைப் பட்டபகல் வெளிச்சத்தைப் போல என்னால் தெளிவாக புரிந்துக் கொள்ளமுடிகிறது.

  • ஆயிரம் முறை தோல்வியுற்றாலும் லட்சிய நோக்கிலிருந்து பின்வாங்காதீர்கள். போராட்டங்களையும் தவறுகளையும் பொருட்படுத்தாதீர்கள். லட்சியப்பாதையில் வீறுநடைபோடுங்கள்.

  • அறிவு வளர்ச்சிக்கு ஒரே ஒரு வழிமுறை தான் இருக்கின்றது. நம்முடைய மனத்தை ஒரு முகப்பபடுத்துவதே அந்த வழி.

  • எதையும் வெறும் பரபரப்புடன் மட்டும் அணுகுவது கூடாது. தூய்மை, பொறுமை, விடாமுயற்சி என்ற இம்முன்றினையும் பின்பற்றினால் வெற்றிச் சிகரத்தை எட்டிப்பிடிக்கலாம்.

  • மூளை - தசைகள் - நரம்புகள் என்று உன் உடலின் ஒவ்வொரு பாகத்திலும் அந்த ஒரு கருத்தினையே பரவ விடுங்கள். மற்ற எந்த கருத்தினையும் உங்கள் மனத்திற்குள் நுழைய அனுமதிக்காதீர்கள்.

  • நாம் நினைக்கும் எண்ணங்கள் யாவும் விதை வடிவத்தை பெற்று பின்னர் நம் சூட்சம சரீரத்தில் சிறிது காலத்திற்கு தங்கி பின்னர் வெளிப்பட்டு வந்து அதற்குரிய பலன்களைத் தருகின்றன. இந்தப் பலன்களே மனிதனுடைய வாழ்க்கையை நிர்ணயிக்கின்றன.

  • ஒரு நல்ல கருத்தை எடுத்துக் கொள்ளுங்கள் - அந்த ஒரு கருத்தையே உங்கள் வாழ்க்கை மயமாக்குங்கள். அக்கருத்தையே நாளும் கனவு காணுங்கள். அக்கருத்தை முன்னிறுத்தியே வாழ்க்கையை நடத்துங்கள். வாழ்க்கை சொர்க்கமாகும்.

  • எழுந்திருங்கள்! விழித்துக் கொள்ளுங்கள். இனியும் தூங்க வேண்டாம். எல்லாத் தேவைகளையும் எல்லாத் துன்பங்களையும் போக்குவதற்கான பேராற்றல்! உங்கள் ஒவ்வொருவருக்குள்ளேயும் இருக்கிறது.இதைப் பூரணமாக நம்புங்கள்.

  • மற்றவர்களின் தெய்வீக இயல்பை வெளிப்படுத்த உதவி செய்வது தான். நம்முடைய தெய்வீக இயல்பை வெளிப்படுத்துவதற்கான ஒரே வழியாகும்.

  • பொய் சொல்வது சாதாரண விஷயம் அல்ல. அது ஒரு கலை.பொய் சொல்ல அசாத்திய திறமை வேண்டும். ஏராளமான ஞாபக சக்தி வேண்டும். ஆனால் பொய் சொல்லி பிறரை ஏமாற்றுபவர்கள் மற்ற ஏமாற்றுக்காரர்களாலேயே பாடம் பெறுவார்கள்.

  • துக்கம் என்பது அறியாமையின் காரணமாகத்தான் ஏற்படுகிறது.வேறு எதனாலும் அன்று.

  • கடலைக் கடக்கும் இரும்பு போன்ற மன உறுதியும்; மலைகளையே துளைத்துச் செல்லும்; வலிமை தோள்களுமே; நமக்குத்தேவை. வலிமைதான் வாழ்வு பலவீனமே மரணம். மிகப்பெரிய இந்த உண்மையை உணந்து கொள்ளுங்கள்.

தன்னம்பிக்கை!

நேற்று என்பது
முடிந்துவிட்டது!
நாளை என்பது
இனிவரும் நாள்!
இன்று என்பது
உன் கையில்!

நடந்ததை மறந்துவிடு
நடப்பதை நினைத்திரு
வெற்றி அடையும் வரை
விழித்திரு உனக்கான
விடியலை நோக்கி...

உழைத்திரு...முயற்சித்திரு
உன் வெற்றியை அடைய
எதை தேடுகின்றாய்
புறத்தே தேடினால்
அது கிடைக்காது
அகத்தே ஒளிந்திருக்கும்
உன் சக்தியை
விடாது பற்றிக்கொள்

உனக்கான
வெற்றிக்கனியைப் பறிக்க
என்னால் முடியாது
எதுவும் முடியாது
என்பது "அவநம்பிக்கை"...

உன் கனவுகளை
நிஜமாக்கி உன்னை
வெற்றிமேல் வெற்றி
பெறச்செய்வது
என்பது உன் தன்னம்பிக்கை

வெயில் உள்ளவரை
மட்டுமே உன்
நிழல்கூட உன்னை
தொடர்ந்து வரும்
ஆனால்
உன்னை விடாமல்
பற்றிக் கொண்டு
தூக்கி நிறுத்திட
உன்னால் முடியும்
என்று சிந்திக்க வைக்கும்
அந்த முன்றாவது கைதான்
உன் "தன்னம்பிக்கை"

விடாமல் பற்றிக்கொள்
விழாமல் எழுந்துநிற்பாய்
உன் வாழ்க்கையில்...

நெப்போலியனின் காதலும் வீரமும்.

காதல், நாணம், துணிச்சல், வீரம், ஆசை, ஆளுமை,ஈகை, நகைச்சுவை திறன் மற்றும் படைப்பாற்றல் ஆகியவை மனிதகுலத்தின் பிரத்யேக குணங்களாக விளங்கின. மனித நாகரீகத்தில் காதல், வீரம் ஆகிய இரண்டு உணர்வு வெளிப்பாடுகள் மிகுந்து காணப்படும் மனிதன் தளபதியாக, தலைவனாக, அரசனாக கற்காலம் முதல் கம்ப்யூட்டர் காலம் வரை ஏற்றுக் கொள்ளப்படுகின்றான்.
17-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிரான்ஸ் தேசத்தின் ஆளுகைக்குட்பட்ட ஒரு சின்னஞ்சிறிய தீவில் 'போனபர்ட்' என்றுஅழைக்கப்படும் குடும்பத்தில் பிறந்த நெப்போலியன் தன்னுடைய இருபதாவது வயதிலேயே போர்வீரனாக வாழ்க்கையை தொடங்கியவன். தன் வாழ்நாளின் பாதிக்கும் மேற்பட்ட நாட்களை யுத்த களங்களிலேயே கழித்தவன். நெப்போலியனின் போர் தந்திரங்களும், போரிடும் முறையும்,படைவீரர்களிடையே ஆற்றும் வீரம் மிக்க சொற்பொழிவுகளும், ஐரோப்பிய நாடுகளை ஒவ்வொன்றாக தன் ஆளுகைக்கு கீழ் கொணர்ந்த திறனும் உலகின் வரலாறு அறிஞர்களால் உன்னிப்பாக கவனிக்கப்பட்டவை ஆகும். நெப்போலியனின் அசாதரணமான யுத்த குணங்களை போலவே அவனின் காதலும், அதன் தொடர்ச்சியும் முடிவும் வித்தியாசமானதாக அமைந்து விட்டது.

பிரான்ஸ் தேசத்தில் ஏற்பட்ட உள்நாட்டுக் கலவரத்தை அடக்கிவிட்டு மாளிகையில் அமர்ந்திருக்கின்றான் நெப்போலியன். அப்பொழுது ஒரு சிறுவன் அவனை வணங்கிவிட்டு சமீபத்தில் ஏற்பட்ட கலவரத்தில் அவனுடைய அப்பா இறந்து விட்டதாகவும் அப்பொழுது அவனது குடும்பத்தைச் சேர்ந்த ஒரு வாள் படையினரால் கைப்பற்றப் பட்டதாகவும், அந்த வாள் வழிவழியாக வந்த தன் குடும்பச் சொத்து என்பதால் தாங்கள் அதை பையனின் பணிவும், குடும்ப பாரம்பரியத்தின் மீது கொண்ட அவனுடைய பற்றுதலும் நெப்போலியனை வியப்பில் ஆழ்த்துகின்றது. பாரட்டத்தக்க நற்பண்புகள் கொண்ட இப்பையனை வளர்த்த தாயைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் மேலிட அவன் வீட்டிற்கு செல்கின்றான் நெப்போலியன், அவன் நினைத்துக் கொண்டு சென்றதோ நரை முடியும் சுருங்கிய கன்னங்களும் கொண்ட நடுத்தர வயது பெண்ணை. ஆனால் கண்டதோ கட்டுக்குலையாத மேனியும், சொக்கி விழ வைக்கும் அழகும் கொண்ட சொக்கத்தங்கம் போன்ற சொர்ணமயிலை. போர் களங்களில் வெற்றிகளை குவித்த நெப்போலியன் காதல் களத்தில் முதன்முறையாக தோற்றுப் போகின்றான்... பார்த்தவுடன் பற்றிக் கொள்ள நினைத்த அந்த இளம் விதவையின் பெயர் ஜோஸபைன். தன்னை விட இரண்டு வயது மூத்தவளும் இரண்டு ஆண் மக்களுக்குத் தாயுமான ஜோஸபைனிடம் தன் காதலை தெரிவிக்கின்றான். மறுக்கின்றாள் அவள். விடாமல் தொடர்கின்றான். மண்டியிடுகின்றான். அவள் முன் கெஞ்சுகின்றான். பிதற்றுகின்றான். இரண்டு குழந்தைகளையும், விதவைக் கோலத்தையும், சமூகத்தின் ஏச்சுப் பேச்சுக்களையும், நெப்போலியனின் எதிர்கால யுத்த நடவடிக்கைகயையும் சுட்டிக் காட்டி மறுக்கின்றாள் ஜோஸப்பின். இறுதியில் எப்பொழுதும் போல் வென்றான் நெப்போலியன். திருமணம் இனிதே நடைபெறுகின்றது. இன்பமாய் வாழ்வைத் தொடங்கினர் நெப்போலியன்-ஜோஸப்பின் தமபதியினர்.

யுத்தக் களத்தில் நினைத்த மாத்திரத்தில் தூங்கவும், நினைத்த மாத்திரத்தில் திரும்பி எழவும் தெரிந்த நெப்போலியன் திருமணம் முடிக்கும்போது சாதாரண படைத்தளபதி, விரைந்து செயலாற்றும் திறனும், துணிச்சலும், வெறித்தனம் மிக்க வேகமும் கொண்ட நெப்போலியன் இத்தாலி, ஆஸ்ட்ரியா, சார்டினாயா ஆகிய நாடுகளின் வெற்றிக்குப் பின் பிரான்ஸ் தேசத்தின் படைத் தவைனாகின்றான். தேன் குடத்தைச் சுமந்து வரும் வண்டிணை போல் காதல் மனைவியின் சுகத்தை துளித்துளியாய் அனுபவித்த நெப்போலியனால் இத்தாலியின் ஆல்ப்ஸ் மலையும், காட்டாறுகளும், கற்பாறைகளும் காட்டு விலங்குகளும் பாலைவனங்களும் அவனுக்கு பூந்தோட்டமாய்க் காட்சியளித்தன. நினைத்த மாத்திரத்தில் நாடுகளை வெல்வதும். கைப்பற்றிய நாட்டிலிருந்து கொண்டு வந்த செல்வங்களைக் குவிப்பதும் என தொடர்நது நெப்போலியன் பிரான்ஸ் தேசத்தின் மக்களால் பெருமிதத்தோடு பார்க்கப் பட்டான். உலக அரங்கில் பிரான்ஸ் தேசத்தின் மதிப்பு மிக வேகமாய் உயர்ந்தது. புதினாறாம் லூயி மன்னனின் முடியாட்சியை முறியடித்து குடியாட்சியை பதினேழாம் நூற்றாண்டிலேயே மலரவிட்ட பிரான்ஸ் தேசம் மெல்ல மெல்ல நெப்போலியனின் வீரத்தால் வசீகரிக்கப்பட்டு அவனைப் பேரரசனாக ஏற்றுக்கொண்டது ஜோஸபின் பேரரசியாக முடிசூட்டப்பட்டான்.

பின்விதி மெல்ல விளையாடியது. உலகின் கால்பகுதி நிலங்களை தன் ஆளுகையில் வைத்திருந்த இங்கிலாந்த௉யும் மிகப்பெரிய நாடான ரஸ்யாவையும் கைப்பற்றினால் இந்த பூமிப்பந்து முழுக்க தன் கையில் வந்து விடும் என கணக்குப் போட்டான் நெப்போலியன் ரஸ்யாவின் போர் தந்திர முறைகளாலோம், அனுபவத்தறியாத கடுங்குளிராலும் தோற்றுப் போனான். இப்போரில் சுமார் ஒன்றறை லட்சம் பேர் குளிரில் விறைத்து இறந்து போனார்கள் மக்கள் மெல்ல வெறுக்க ஆரம்பித்தனர். தனக்குச் சொந்த மகன் பிறந்தால் மண்ணாட்சியை தக்க வைத்துக் கொளளலாம் என்ற தவறான ஆலோசனையால் மனம் மாறிய நெப்போலியன் ஊனுருக. நெஞ்சுருக,நெத்குருக காதலித்த அன்பு மனையாளை மாளிகையை விட்டு அனுப்பிவிட்டு ஆஸ்டிரிய நாட்டு அரச வம்சத்தைச் சேர்ந்த மேரிலூயி என்னும் பெண்ணை மணக்கினறான்.

ஒரு வருடத்தில் மகன் பிறக்கின்றான். சூழ்நிலை மாறி காற்று மாதிரி வீசுகின்றது பாரம்பர்யமாய் அரசியல் தந்திரமும் போர் திறனும் மிக்க இங்கிலாந்து நேசநாடு கிளன் கூட்டணியை ஏற்படுத்தி பிரான்ஸில் உள்நாட்டுக் கலவரத்தை உண்டாக்குகின்றது. நெப்போலியன் செயிண்டு எலினா தீவில் சிறைப் பிடிக்கப் படுகின்றான் வெற்றி பெற்ற நாடுகளின் உப்பரிகைகளில் உலவிய நெப்போலியன் தனிமையில் தவிக்கின்றான். இரண்டாவது மனைவி மேரி லூயி நாட்டை விட்டு ஓடிவிடுகின்றாள். விரட்டி விடப்பட்ட காதல் மனைவி மட்டும் நாட்டின் எங்கோ ஒரு மூலையில் நெப்போலியன்-எலினா- நெப்போலியன் என்று புலம்பியபடியே லோய்வாய்ப்பட்டு இறந்து விடுகின்றாள்.

ஒருவருக்கொருவர் உயிருக்குயிராய் காதலித்தனர் நெப்போலியனும், ஜோஸப்பினும். நெப்போலியன் காதலிலும் வீரத்திலும் தோற்றுப் போனான். ஜோஸப்பின் வாழ்க்கையில் தோற்று காதலில் வென்றாள்.

காதலும் வீரமும் மனித குலத்தின் அடையாளங்கள். சமூக அமைப்புகளையும், இயற்கை நியதிகளையும் மீறிய முரட்டுத்தனமான ஆளுமைகளுடன் கூடிய வீரமும் தோற்றுப் போகும். காதலும் தோற்றுப் போகும்.

Sunday, May 9, 2010

Saturday, May 8, 2010

மே 07 வரலாற்றில் இன்று

1272 – திருத்தந்தையின் தேர்தலை ஒழுங்குபடுத்துவதற்காக பிரான்சில் லயன்ஸ் இரண்டாவது பொதுச் சங்கம் ஆரம்பமானது.

1348 – பிராக்கிலுள்ள அமைக்கப்பட்ட சார்லஸ் பல்கலைக்கழகம் மத்திய ஐரோப்பவில் உருவான முதல் பல்கலைகழகமானது.

1539 - சீக்கிய மதத்தை ஆரம்பித்த குரு நானக் இறந்தார்

1664 – வெர்செய்ல்ஸ் அரண்மனையை பிரான்ஸ் மன்னன் 14ம் லூயிஸ் அமைத்தார்.

1861 - நோபல் பரிசு பெற்ற வங்கக் கவிஞர் இரவீந்திரநாத் தாகூர் பிறந்தார்,

1895 - இரஷ்ய அறிவியலாளர் அலெக்சாண்டர் பப்போவ் (Alexander Stepanovich) உலகின் முதலாவது வானொலிக் கருவியை சென் பீட்டர்ஸ்பேர்க்கில் அறிமுகப்படுத்தினார். இந்நாள் இரஷ்யாவில் வானொலி நாளாகக் கொண்டாடப்படுகிறது

1999 – திருத்தந்தை 2ம் ஜான் பால் ரொமேனியாவுக்குத் திருப்பயணம் மேற்கொண்டார். 1054ம் மிகப்பெரும் பிரிவினைக்குப் பின்னர் பெரும்பான்மையான கீழைரீதி கிறிஸ்தவர்கள் வாழும் நாட்டிற்குச் சென்ற முதல் திருத்தந்தையானார்.

2007 – பெரிய ஏரோதின் கல்லறை எருசலேமில் கண்டுபிடிக்கப்பட்டது

மே06 வரலாற்றில் இன்று

1527 - ஸ்பானிய, மற்றும் ஜெர்மனியப் படைகள் ரோம் நகரைச் சூறையாடின. 147 சுவிஸ் படை வீரர்கள் திருத்தந்தை 7ம் கிளமென்டைப் பாதுகாப்பதற்காக புனித ரோமப் பேரரசின் மன்னன் ஐந்தாம் சார்லஸ்க்கு எதிராகப் போரிட்டு இறந்தனர்.

1536 அரசன் 8ம் ஹென்ரி ஆங்கில மொழி விவிலியங்கள் ஒவ்வோர் ஆலயத்திலும் வைக்கப்பட வேண்டுமெனக் கட்டளையிட்டான்.

1542 – புனித பிரான்சிஸ் சேவியர் அக்காலத்திய போர்த்துக்கீசியரின் தலைநகரான கோவாவை அடைந்தார்.

1854 - இந்தியாவில் முதல் தபால் தலை வெளியிடப்பட்டது.

1857 - பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் 34வது இராணுவப் பிரிவு தனது அலுவலர்களைப் பாதுகாக்கத் தவறியமைக்காக கலைக்கப்பட்டது. இப்பிரிவின் மங்கள் பாண்டே Mangal Pandey என்ற படைவீரர் தனது மேலதிகாரிகளுக்கெதிராகக் கிளர்ச்சியில் ஈடுபட்டு ஏப்ரல் 8 இல் தூக்கிலிடப்பட்டான்.

1889 - ஈபெல் கோபுரம் பாரிசில் பொதுமக்களுக்காக அதிகாரபூர்வமாகத் திறந்துவிடப்பட்டது.

1962 புனித மார்ட்டின் டி போரஸ் திருத்தந்தை 23ம் அருளப்பரால் புனிதராக உயர்த்தப்பட்டார்

2001 திருத்தந்தை 2ம் ஜான் பால் சிரியாவுக்கு மேற்கொண்ட திருப்பயணத்தில் மசூதிக்குச் சென்ற முதல் பாப்பிறை என்ற பெயர் பெற்றார்

உலகமொழிகள்

                                                           உலகமொழிகள்

உயிருள்ள மொழிகளின் எண்ணிக்கை : 6912
இவற்றுள் இறக்கும் தறுவாயிலுள்ள மொழிகள் : 516
உலகில் அதிகூடிய மக்கள் பேசும் மொழி : மன்டாரின் சைனீஸ்
அதிக மொழிகள் பேசப்படும் நாடு : பப்புவா நியூ கினியா (820 வாழும் மொழிகள்)
அதிக சொற்களை கொண்ட மொழி : ஆங்கிலம் (250,000)
குறைந்த சொற்களை கொண்ட மொழி : ரகி ரகி (Taki Taki) (340 சொற்கள்)
அதிக மக்கள் பேசும் மொழிகள் என்று வகைப்படுத்தும் போது எங்கள் தமிழ் மொழி 16,17 இடத்தில் காணப்படுகின்றது. மயூரேசன் அச்சப்படுவது போன்று தமிழுக்கு அழிவு ஒருபோதும் வராது என்று நாமும் நம்புவோம்.
மொழி அடர்த்தி கூடிய நாடு : வனுவாத்
                                                        


உலகசனத்தொகையும் மொழிகளும்

Monday, May 3, 2010

Anojanpc's Search Engine

Anojanpc's Search Engine

Anojanpc's Search Engine

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | cheap international calls